பிற்பகல் மணி இரண்டு இருக்கும். வெயில் மண்டையைப் பிளக்கும் நேரம். மாலதி பள்ளி முடிந்து தன் அடுக்குமாடி கட்டடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் அவள் மின்தூக்கி விசையை அழுத்தி மின்தூக்கிக்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து மின்தூக்கி கீழே வந்தது. மாலதி மின்தூக்கியில் ஏறி பத்தாவது மாடியைக் கண் இமைக்கும் நேரத்திற்குள் அடைந்துவிட்டாள். அவள் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் தன் சாவியை எடுத்து தன் வீட்டின் கதவின் பூட்டைத் திறந்தாள். திடீரென்று அவளுக்கு ஏதோ ஒரு சத்தம் கேட்டது. அவள் திரும்பிப் பார்த்தபோது அவளுக்குத் தன் இதயத் துடிப்பே ஒரு கணம் நின்றுவிட்டதுபோல் இருந்தது. ஏனென்றால் இரு ஆட்கள் தன் அண்டை வீட்டாரின் பூட்டை உடைக்க முயல்வதை அவள் கண்டாள். மாலதி அமைதியாக வீட்டினுள் நுழைந்து தொலைபேசி மூலம் அக்கம் பக்கக் காவல் சாவடியுடன் தொடர்புக்கொண்டு நடந்ததைச் சொன்னாள். கண் இமைக்கும் நேரத்திற்குள் காவலர்கள் வந்துவிட்டார்கள். காவல் வாகனத்தின் ஒலியைக் கேட்டதும் திருடர்கள் ‘திரு திரு’ என்று விழித்துக்கொண்டே கம்பி நீட்ட முயன்றார்கள். ஆனால், காவலர்கள் சாமர்த்தியமாக அந்த இரு திருடர்களைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்கள்.
காவலர்கள் மாலதியின் பொது உணர்வையும் நற்செயைலயும் பாராட்டினர். அவளின் புகைப்படத்தோடு செய்தித்தாளில் அச்செய்தி வெளிவந்தது. மாலதியின் பெற்றோர் தங்கள் மகளைக் கண்டு பெருமிதம் கொண்டனர். |